தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு அதிகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
நாட்டில் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு அதிகமாக நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
“முதல்வரின் சொந்த தொகுதியில், சென்னை கொளத்தூர் சட்டப்பேரவை பகுதியில், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் குப்பன் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். உடனிருந்த மற்றோர் ஊழியர்கள் சங்கர், ஹரிஹரன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் மூன்று தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்ததை எண்ணி, இனியும் முதல்வரின் தொகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சியாகும். திமுக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை; இதை விபத்து என்று மட்டுமே சொல்வது போதாது, இது தூய்மைப் பணியாளர்களை பாதுகாப்பில்லாமல் வைத்துக் கொலை செய்கிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.