“பெரியாருக்கு துரோகம் செய்யவில்லை” — ஆ.ராசாவுக்கு வீரபாண்டியன் பதில்

திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பேசியபோது,

“பொதுவுடைமை இயக்கத்தினர் ஒரு காலத்தில் பெரியாரை எதிர்த்தனர். ஆனால் இன்று இந்த மேடையில் பெரியார்தான் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள்” எனப் பேசினார்.

இதற்கு பதிலளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தனது உரையில் கூறியதாவது:

“நாங்கள் பெரியாருடன் கருத்து வேறுபட்டது உண்மைதான். ஆனால் பெரியாருக்கு எந்த தீங்கும் செய்யவில்லை; துரோகம் செய்யவில்லை. இன்று இந்த மேடையில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம் என்றால், பெரியார் எங்களுக்கு தேவைப்படுகிறார் என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால் பெரியார் வந்து சேர்ந்த அடிப்படைச் சிந்தனை கம்யூனிஸமும், சமத்துவமும் தான் என்பதை ஆ.ராசா உணர வேண்டும். திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் இரண்டின் இலக்கும் சமதர்மம் மற்றும் சமத்துவம் தான்.

எதிரி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக — அதிலிருந்து வழுவிவிடாமல் இருக்க வேண்டுமென்பதே என் வேண்டுகோள்,” என வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

Facebook Comments Box