என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன்

கரூர் துக்க சம்பவத்தைப் பற்றிய அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது. இதன்போது தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரூர்-வேலுச்சாமிபுரம் பகுதியில் உயிரிழந்தவர்களின் உறவுகளுடன் தொடர்பில் இருந்து, தவெக தலைவர் விஜய் இரண்டு நாட்களாக வீடியோ கால் மூலமாக ஆறுதல் வழங்கி வருகிறார்.

தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

“வேதனையை மீற முடியாது; அதே சமயம், உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுடன் பங்கெடுத்துக்கொள்வதே அமைதியை உருவாக்கும் வழி. இந்த அமைதியைப் பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகள், வதந்திகள், வெறுப்பை நம்ப வேண்டாம். நான் அந்த கல்லடிகளை தாங்கவேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் தொடர்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுடன் வாழ்நாள் முழுவதும் பயணித்து, அவர்களுக்கு நீதியை வழங்குவதே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.”

Facebook Comments Box