புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.6,908 தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ₹6,908 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்ச வரம்பு ₹7,000 என்று நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு குரூப்-சி மற்றும் நான்-கேசட்டட் குரூப்-பி ஊழியர்கள் 2024–25 ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான “அட்-ஹாக் போனஸ்” பெறுவர்; இது ₹6,908 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சம்பள முறையை பின்பற்றும் புதுவை யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும் இந்த உத்தரவுகள் பொருந்தும். அதன்படி, புதுவை அரசில் பணிபுரியும் குரூப்-பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

தகுதி:

  • கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பணியில் இருந்தவர்களும்
  • 2024–25 ஆண்டில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக சேவை செய்தவர்களும்

குறிப்பாக, 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்தோர் போனஸ் பெற தகுதியுள்ளவர்கள். போனஸை துறைகளின் அனுமதிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து செலுத்த வேண்டும்.

மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றி, புதுவை அரசின் நிதித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார். நகல் அனைத்துத் துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Facebook Comments Box