தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. இதில் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் பேசிய சித்தராமையா, காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கர்நாடகா வற்புறுத்திய போதிலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஒழுங்குமுறைக் குழு உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக ஜூலை 14ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box