செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவதாகவும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது சாட்சிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Facebook Comments Box