டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழை பெய்ததால், அதிகாரிகள் குடை பிடிக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்தார்.
அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் விளைவிக்கக்கூடிய 109 பயிர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இதை முன்னிட்டு டெல்லி வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் மழை பெய்தது. அப்போது, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்க அதிகாரிகள் வந்தனர்.
ஆனால் அதை மறுத்த பிரதமர் மோடி, கையில் குடையை ஏந்தி மற்றவர்கள் நனையாமல் பாதுகாத்தார். கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், திட்டத்தை ஒத்திவைக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்த போதிலும், விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் மோடி அதை ஏற்க மறுத்துவிட்டார்.
Facebook Comments Box