குரங்கம்மை பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.
ஆப்பிரிக்கா, காங்கோ. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்களை கண்காணிக்க விமான நிலையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.
அப்போது குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Facebook Comments Box