சவுதி அரேபிய பாலைவனத்தில் கார் கவிழ்ந்ததில் தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர், ரூபா அல்-காலி பாலைவனத்தின் வழியாக சக ஊழியருடன் வழக்கமான வேலையாக காரில் பயணம் செய்தார்.

அப்போது கார் ஜிபிஎஸ் சேவையை இழந்ததால் பாதையை மாற்றி இருவரும் பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர். காரில் எரிபொருள் தீர்ந்து போனதால், அங்கிருந்து நகரை அடைய முடியவில்லை. சுமார் ஐந்து நாட்களாக வெயிலில் தண்ணீர் இல்லாமல் இறந்தனர்.

Facebook Comments Box