நேபாளத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் கடந்த 20 நாட்களில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் மேலும் கூறியது:
நேபாளத்தில் கடந்த 20 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 குழந்தைகள் அடங்குவர். 51 போ காயமடைந்தார். 24 பேரைக் காணவில்லை. 1,250 பேர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 790 வீடுகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கின. 519 வீடுகள் மற்றும் 19 பாலங்கள் சேதமடைந்தன.
மீட்பு நடவடிக்கையில் நேபாள ராணுவமும் காவல்துறையும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Facebook Comments Box