மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தர்களின் ஆரோகரா முழக்கத்தில் அதிர்ந்த திடல்
மதுரை மாநகரின் இதய பகுதியில் அமைந்துள்ள பாண்டிகோவில் அம்மா திடல் கடந்த வாரம் ஒரு பக்தி பரவசத்தில் மூழ்கியது. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை ஒன்று சேர்த்த ஒரு ஆன்மிக பெருவிழாவாக அமைந்தது.
மாநாடு காலைதொடங்கி இரவு வரை நீடித்தது. இதில் முருக பக்தர்கள் அறுபடை வீடுகளின் மாதிரிகளில் வழிபாடு செய்து, ‘அரோகரா!’ என முழங்கிய அதீத பக்திப் புண்ணியத்தால் அந்த இடம் முழுவதும் ஆன்மிக அலைகளால் நிரம்பியது. மதுரை சித்திரைத் திருவிழா போல் கூட்டம் தரிசனமளித்த இந்த நிகழ்வு, மக்கள் வருகை மற்றும் பக்தி உணர்வில் எல்லைகளைத் தாண்டியது.
இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாட்டில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாஜக மூத்த தலைவர்கள், ஆதீனங்கள், மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக பம்பை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சிறுவன் சூரிய நாராயணன், தனது காந்தர்வ குரலால் முருகனைப் பாடிய பக்திப் பாடலால், மக்கள் அனைவரையும் பரவசத்துக்கு இட்டுச் சென்றார்.
சிரவ ஆதீன கர்த்தா ஸ்ரீ ராமானந்த குமரகுருபர சுவாமிகள், மாநாட்டு மேடையில் உரையாற்றினார். அவருக்கு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாகத் திருநாளன்று பூஜிக்கப்பட்ட வேல், கண்ணீர் மல்க அளிக்கப்பட்டது. இது அவரது ஆன்மிக பணியை பாராட்டும் வகையில் வழங்கப்பட்டது.
மேலும், சிவன், பார்வதி வேடமிட்டு கலைஞர்கள் நடனமாடிய நிகழ்ச்சி பக்தர்களை கவர்ந்தது. இந்த நடன நிகழ்ச்சி, கலை, பக்தி மற்றும் புராண வரலாற்றின் திருச்சேர்க்கையை வெளிப்படுத்தியது. இதையடுத்து நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள், பக்தர்களுக்கு ஆன்மிக நெகிழ்ச்சியைக் கொடுத்தன.
மாணவர்கள், குடும்பங்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட இந்த முருகன் மாநாடு, ஒரு கலையம்சமான ஆன்மிக திருவிழாவாகவே அல்லாது, முருக பக்தர்களின் நம்பிக்கையை ஒன்றிணைக்கும் வலுவான மேடையாகவும் திகழ்ந்தது.
🔴LIVE : மதுரை மண்ணில் முருகன் மாநாடு 2025 | – குவியும் பக்தர்கள் | AthibAn Tv