அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நடத்துவது என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. முருகப்பெருமானின் பெருமையை உலகமே அறியும்.
அதன்படி பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருக பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருளாளர் முருகன் காட்சிகள், பார்வையாளர்களை கவரும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாண அரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஆய்வகங்கள் போன்றவை உள்ளன.
இந்நிலையில் முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது திராவிட மாடல் ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, தொண்டு செய்து தினமும் ஆன்மிக பெரியோர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்“ என முதல்வர் மு க ஸ்டாலின் கூறினார்.
Discussion about this post