விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு மேள தாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஒரே தேரின் முன்புறம், குரோத்தி கணபதி, பின்புறம் மோட்ச கணபதி என பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மூங்கில் கிழங்கு மாவு, தேங்காய் நார் போன்ற மூலப் பொருட்களால் சிலைகள் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்காமல் வாட்டர் பெயின்ட் மூலம் பாலிஷ் செய்யப்படுகிறது. விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் ரசித்து வழிபடுகின்றனர்.
Discussion about this post