அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

0

அதிமுகவின் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

“வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமான தகவல் அறிந்து மிகுந்த துயரமடைந்தேன். அவரை இழந்த குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தையும், மனப்பூர்வமான ஆறுதலையும் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

டி.கே.அமுல் கந்தசாமி – வாழ்க்கை வரலாறு:

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டாபாளையத்தைச் சேர்ந்த டி.கே.அமுல் கந்தசாமி, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here