காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஃபா முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதலில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் மக்கள் செறிந்து வாழும் ரஃபா நகரின் தெற்கில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்து வருகின்றனர்.

Facebook Comments Box