சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இந்தியாவின் தலைமையில் புலம்பெயர் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
ஜெனிவாவில் உள்ள இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில் நிரந்தர பிரதிநிதிகள் அளவிலான கூட்டத்தை இந்தியா ஏற்பாடு செய்தது.
கொழும்பு செயல்முறை அமைப்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுகிறது.
இதில், ஆசியாவில் இருந்து 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஜெனீவாவில் நடந்த முதல் கூட்டத்திற்கு இந்தியா தலைமை தாங்கியது, இந்த அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வெளியுறவுத்துறை செயலர் முக்தேஷ் பர்தேசி, உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.