மகாராஷ்டிரா பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ஒரு வாரம் கழித்து, முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சுணக்கம் (தாமதம்) நீடிக்கிறது. இந்த பிரச்சனையை விரைவாக தீர்க்கும் நோக்கில், பாஜக இவர்கள் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, வரும் 5-ஆம் தேதி முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார். இதன் மூலம், மாநில அரசின் அரசியல் நிலவரத்தில் புதிய மாற்றங்கள் உருவாக உள்ளதாக கருதப்படுகிறது.
Discussion about this post