மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருந்த இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் கைதட்டி பாராட்டினர்.

கடந்த 2023 பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது, ஆனால் தற்போது அது ரூ.12 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்த நிலையில், ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் ரூ.75,000 வரை கூடுதலாக விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box