நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பல்வேறு புதிய தொழில்துறை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, அசாமில் புதிய யூரியா உர தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க ரூ.1.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,

புதிய தொழில்களை உருவாக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொம்மைகளை தயாரிப்பதற்கான சிறப்பு திட்டம் உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் இந்தியா பொம்மை உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 5 இடங்களில் இளைஞர்களுக்காக உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Facebook Comments Box