போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் உத்தரப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், உத்தரபிரதேச மாநில அமைச்சரவை கூடி போட்டித் தேர்வுக்கான விதிகளை கடுமையாக்கியது.
அந்த வகையில், மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வில் முறைகேடு நடந்தால் 2 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்கவும், ரூ.1 கோடி அபராதம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box