லாலுவை சந்தித்த சுதர்சன் ரெட்டி – பாஜக கடும் எதிர்ப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவைப் பெற்றுவரும் அவர், சமீபத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் சந்தித்தார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

“இந்தத் தேர்தலில் நாட்டின் ஆன்மாவை காப்பாற்ற எனக்கு வாக்களிக்குமாறு சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், கால்நடை தீவன ஊழலில் தண்டனை பெற்ற லாலுவைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

ஊழலில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால், எப்படிப்பட்ட நீதிபதி என்று கேள்வி எழுகிறது. ஆகையால் தேசத்தின் ஆன்மா பற்றி பேச வேண்டாம்” என்று அவர் விமர்சித்தார்.

மேலும், பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியாவும் இந்தச் சந்திப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Facebook Comments Box