மாறிவரும் இந்தியாவை உலகமே வியப்புடன் பார்க்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாடிய அவர், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம் வேறு எந்த நாடும் செய்யாத சாதனையை இந்தியா அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

நம்பகமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், ஸ்டார்ட் அப் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதிலும், ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்வதிலும் இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உலகமே வியப்புடன் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

Facebook Comments Box