ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் ரீசார்ஜ் திட்டங்களை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மலிவான விலையில் தொடர்ந்து வழங்குகிறது. மேலும் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் பல நன்மைகளைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நிறுவனம் வடகிழக்கு, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டங்கள் கிடைக்காமல் போகலாம். ஏனெனில் பிஎஸ்என்எல் அனைத்து பகுதிகளிலும் தனது சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இதன் சேவை உள்ளது. நீங்கள் BSNL வாடிக்கையாளராக இருந்தால் அல்லது உங்கள் Jio, Airtel, Vodafone சிம்மை BSNLக்கு மாற்ற திட்டமிட்டிருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய BSNL ரீசார்ஜ் திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
BSNL இன் சிறந்த 15 ரீசார்ஜ் திட்டங்கள்:
ரூ.107 திட்டம்: 200 நிமிட அழைப்பு மற்றும் 3ஜிபி டேட்டாவை 35 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.118 திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 10ஜிபி டேட்டாவை 20 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.153 திட்டம்: இந்த திட்டம் 26 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், 26 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
ரூ.199 திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 30 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.249 திட்டம்: 45 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறுங்கள்.
ரூ. 347 திட்டம்: இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 54 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
ரூ. 599 திட்டம்: இந்த திட்டத்தில், உங்கள் ரீசார்ஜில் வரம்பற்ற அழைப்புடன் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம். மேலும் இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
ரூ.666 திட்டம்: இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம். மேலும் இந்த திட்டம் 105 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரூ.699 திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற அழைப்பு மற்றும் 130 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறலாம்.
ரூ.997 திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை 160 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறலாம்.
ரூ.1,198 திட்டம்: இந்த ரீசார்ஜ் 300 நிமிட அழைப்பு மற்றும் 365 நாட்களுக்கு மாதத்திற்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் மாதத்திற்கு 30 எஸ்எம்எஸ் பெறலாம்.
ரூ.1,499 திட்டம்: இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 24 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை 336 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.1,999 திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற அழைப்பு மற்றும் 600 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
ரூ.2,399 திட்டம்: இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 395 நாட்களுக்கு பெறலாம்.
ரூ.2,999 திட்டம்: இது ஒரு ப்ரீபெய்ட் பேக். இது வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 365 நாட்களுக்கு வழங்குகிறது.
FRC திட்டம்: இந்த திட்டத்தின் விலை ரூ.999. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த திட்டம் உங்களுக்கு 200 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
ரூ. 108 திட்டம்: இது புதிய வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் திட்டமாகும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
Discussion about this post