ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து காணாமல் போன 8 இந்தியர்களை இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் மீட்டுள்ளது.

துகாம் துறைமுகத்திற்கு தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் கடந்த 15ம் தேதி கப்பல் கவிழ்ந்தது.

அந்த கப்பலில் 13 இந்தியர்களும் மூன்று இலங்கையர்களும் பணிபுரிந்த நிலையில், எட்டு இந்தியர்களும் இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

5 இந்தியர்கள் உட்பட மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Facebook Comments Box