கார்கில் போரின் 25வது ஆண்டு விழாவையொட்டி, வரும் 26ம் தேதி பிரதமர் மோடி கார்கில் செல்கிறார்.
1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது.
கடும் பனிப்பொழிவுக்கு இடையே நடந்த இந்த சண்டையில் இந்திய வீரர்கள் கடுமையாக போராடி பாகிஸ்தான் வீரர்களை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கார்கில் போரின் 25வது ஆண்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கார்கில் செல்கிறார். திராஸ் போர் நினைவிடத்தில் போர் தியாகிகளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.