செல்போன்களுக்கான சுங்க வரி 15 சதவீதம் வரை குறைப்பு… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0

செல்போன்களுக்கான சுங்க வரி 15 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், அவற்றின் விலை குறையும்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம், வெள்ளி மற்றும் செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்க வரியை குறைப்பதாக அறிவித்தார்.

அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல், பிளாட்டினத்தின் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாகவும், மொபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் சார்ஜர்களுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 25 வகையான கனிமங்களுக்கு இறக்குமதிக்கான சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 3 வகையான புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் மீதான கலால் வரி முற்றிலும் நீக்கப்படும் என்று பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here