டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஐஏஎஸ் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, 5 பேர் டெல்லி டீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் முதற்கட்டமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பழைய ராஜேந்தர் நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post