ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

தன் மீது அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.

அரசியல் சட்டத்தை அழிக்க முயற்சி நடப்பதாக கூறிய ராகுலை, தற்போது அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கிரிராஜ் சிங் விமர்சித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் ராகுல் உண்மைக்கு புறம்பாக பேசுவதாகவும், தவறான தகவல்களை வெளியில் பரப்புவதாகவும் அவர் கூறினார்.

Facebook Comments Box