வங்கதேசத்தில் இருந்து தப்பிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியா வந்த ஷேக் ஹசீனா இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹசீனா இங்கிலாந்தில் தஞ்சம் அடையும் வரை இந்தியாவில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஷேக் ஹசீனா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்ட ஆலோசனையில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது.
வங்கதேச விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச உள்ளார்.
டாக்காவில் இருந்து ஷேக் ஹசீனாவை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் டெல்லி அருகே காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் நேற்று பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் அவர் தனது மகள் சைமா வசேத்தை டெல்லியில் சந்தித்ததாக தெரிகிறது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய இயக்குநராக உள்ளார்.
பங்களாதேஷில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் வீடியோக்களை பகிர வேண்டாம் என மேற்கு வங்க காவல்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் பதட்டமான சூழலை உருவாக்கும் வகையில் சில பதிவுகள் வெளியிடப்படுகிறது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். போலியான வீடியோக்களை பரப்பி சிக்காதீர்கள்.
Discussion about this post