காங்கிரஸ் ஆட்சியில் 98 சதவீத வரி விதிக்கப்பட்டதாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட்டில் நடுத்தர குடும்பங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது என்று பதிலடி கொடுத்தார்.
கடந்த வருடம் வரிகளை குறைத்ததன் மூலம் 37,500 ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் நிலையான விலக்கு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post