வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவில் தாக்குதலுக்கு விஎச்பி தலைவர் அலோக் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் உள்ள இஸ்கான் தலைவரை சந்தித்து, கோவில் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்தார்.
மேலும், “பாதிக்கப்பட்ட இந்து மடங்கள், கோவில்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும், “தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வங்கதேச அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.