நேஷனல் ஹெரால்டு முதல் கர்நாடகாவில் மூடா ஊழல் வரை காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்கிறது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அவர் தனது X தள பதிவில், “காங்கிரஸ் கட்சியின் ஊழல் மரபு தொடர்கிறது! நேஷனல் ஹெரால்டு முதல் கர்நாடகாவில் நடந்த மூடா ஊழல் வரை காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக மக்களின் நம்பிக்கையைத் திரும்பத் திரும்பத் துரோகம் செய்திருக்கிறார்கள். தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொள்ளும் காங்கிரஸ், தலித் குடும்பங்களின் நிலத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ளது என்றார் நட்டா.
Discussion about this post