கொல்கத்தாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவரது தந்தை, மம்தா பானர்ஜி அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.
பெண் மருத்துவரின் பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவரது தந்தை வடக்கு பர்கானாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணையில் இருந்து தங்களுக்கு இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேலும், மருத்துவமனை தரப்பில் யாரும் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், இந்தக் கொலையின் பின்னணியில் ஒட்டுமொத்த அரசுத் துறையும் இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தார்.
இடுகாட்டில் 3 சடலங்கள் இருந்த நிலையில் அவசர அவசரமாக முதலில் மகளின் உடலை எரித்ததாகவும், நீதி கிடைக்கும் என்று கூறும் மம்தா பானர்ஜி அரசு நீதிக்காக போராடுபவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதாகவும் பெண் மருத்துவரின் தந்தை புலம்பினார். .
மேலும், மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், மேற்கு வங்க அரசு வழங்கும் நிவாரணத்தை ஏற்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.