காங்கிரஸில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸுடன் தனது கட்சி இணைக்க போவதாக தகவல் வெளியானது.
இதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவர்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும், குழப்பத்தை ஏற்படுத்த சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் குலாம் நபி ஆசாத்.