பேருந்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து மாநிலத்தில் அதிர்ச்சி.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். கடந்த 12 தேதி பேருந்தில் பயணம் செய்து டெல்லி ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் வந்த சிறுமி, நடத்துனர் ஒருவரிடம் பஞ்சாப் செல்வது எப்படி என்று கேட்டுள்ளார்.
அப்போது கண்டக்டர் சிறுமியை தனது பேருந்தில் ஏறச் சொல்லி, டேராடூனில் இருந்து பஞ்சாப் செல்லலாம் என்று கூறினார். கண்டக்டரின் வார்த்தைகளை நம்பி சிறுமியும் பஸ்சில் ஏறினாள். பேருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை அடைந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர். இரவு நேரத்தை சாதகமாக பயன்படுத்தி, பஸ் நிலையத்தில் கூட்டம் இல்லாததால், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சிறுமியை பஸ்சுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து, அருகில் நின்றிருந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின், கேஷ் கவுண்டரில் பணத்தை கொடுத்தபோது நடந்த சம்பவத்தை காசாளரிடம் நடத்துநர் தெரிவித்தார். கேஷியாவும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றனர்.
5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட சிறுமி இரவில் பேருந்து நிலையத்தில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் இருப்பிடம் குறித்து குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுமிக்கு ஒரு உதவி கிடைத்தது. பேருந்து நிலையத்துக்குச் சென்ற குழந்தைகள் நலக் குழுவினர் சிறுமியை பாதுகாப்புக்காக அரசு மகளிர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில் சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்த போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பேருந்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து மாநிலத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.