பிரதமர் அவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana – PMAY) என்பது இந்தியாவில் வீட்டில்லா மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வீடுகளை கட்டி வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் 2022 ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகளை கட்டிக் கொடுப்பதே ஆகும். இந்த திட்டம் இரு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளது: கிராமப்புறப் பகுதி மற்றும் நகரப்புறப் பகுதி. இப்போது, இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்வதில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை திட்டத்தின் நீக்கம், அளவீடுகள் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்வதில் கூடுதல் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்
புதிய விதிமுறைகள் மூலம், பயனாளிகள் தேர்வில் இலக்குகள் மற்றும் தரத்துடன் இணைந்த பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனால், உண்மையில் வீடுகள் தேவைப்படுவோர் இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பயன் அடைவார்கள்.
மேலும், ஆவாஸ் பிளஸ் மொபைல் போன் செயலியில் பயனாளியின் முகத்தை படம் பிடித்து, அவர் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 மற்றும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள், விவசாய இயந்திர உரிமையாளர்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிசான் கார்டு வைத்திருப்பவர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அரசுப் பணியில் இருந்தால், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள், வருமான வரி, தொழில் வரி செலுத்தினால், அவர்களை பயனாளிகளாக சேர்க்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசன நிலம் 2 புள்ளி 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல்
5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் பாசன வசதி இல்லாத நிலம் வைத்திருந்தால், அவர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post