மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் மோடி டிசம்பர் 4ஆம் தேதி திறந்து வைத்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 4ம் தேதி திறந்து வைத்தார்.இந்த சிலை நிறுவப்பட்ட 8 மாதங்களில் கடந்த மாதம் 26ம் தேதி இடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டின. கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட கலைஞர் சேதன் பாட்டீலை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் இன்று மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (UPD) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானே பட்டோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெற்கு மும்பையில் உள்ள ஹுதாமா சவுக்கிலிருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரை நடந்த கண்டனப் பேரணியில் அவர்கள் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் சிவாஜி சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
Discussion about this post