குஜராத்தில் ரூ. 3,300 கோடி செலவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மின்சாதனங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்குத் தேவையான சிப்கள் சிலிக்கான் மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட செமிகண்டக்டர்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இந்த சிப் தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன், லேப்டாப் போன்ற அன்றாட தகவல் தொடர்பு சாதனங்களில் இந்த சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், செமிகண்டக்டர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செமிகண்டக்டர்கள் தயாரிப்பில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் குறைக்கடத்தி ஆலைகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

குஜராத்தின் சனந்த் நகரில் ரூ.3,300 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கென்ஸ் நிறுவனத்துக்கு குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box