சர்வதேச சூரிய ஒளி விழாவையொட்டி, 1 கோடி வீடுகளில் சூரிய ஒளி கூரை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
முதலாவது சர்வதேச சூரிய திருவிழா கொண்டாடப்படும் நிலையில் காணொளி மூலம் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அப்போது, சர்வதேச சோலார் கூட்டணியில் 100 நாடுகள் இணைந்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் சூரிய ஆற்றல் திறன் 32 மடங்கு அதிகரித்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதே வேகத்தில் தொடர்ந்தால், 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற ஆற்றல் உற்பத்தி என்ற இலக்கை எட்ட முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post