மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி – போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், பாஜகவினர் கைது!

0

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி – போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், பாஜகவினர் கைது!

மயிலாடுதுறையின் பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் இடம்பெற்ற ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜக தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மேலும் முற்றியதை தொடர்ந்து, மாவட்ட பாஜக தலைவர் நாஞ்சில் பாலுவின் தலைமையில் கூடியிருந்த பாஜகவினரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here