WhatsApp Channel
சந்திரமுகி 2 படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், சந்திரமுகி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை புதிய கோணத்தில் சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய பொழுதுபோக்குப் படமாகத் தந்த நண்பர் வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும் அண்ணன் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுயே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இதில் சந்திரமுகியாக கங்கனா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான சந்திரமுகி 2 கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Discussion about this post