தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர்

0

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவான இந்த படம் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசை வழங்கியுள்ளார். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி உள்ளது?

முன்னதாக வந்த டீசர் பார்வையாளர்களில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் கதை குறித்து தெளிவாக புரியவைக்கவில்லை. தற்போது வெளியாகிய ட்ரெய்லர் மூலம், கதையின் மையக்கரு குறித்து ஓரளவு புரிதல் கிடைக்கிறது. திடீரென தனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை சந்திக்கும் ஒரு பிச்சைக்காரர், கோடீஸ்வரராக மாறுகிறார். ஆனால் அந்த நிலைமைதான் அவருக்கு பல சிக்கல்களையும் உருவாக்குகிறது.

இப்படத்தில் ஊழல், அரசியல் பின்னணி போன்ற விவரங்கள் தீவிரமாக பேசப்பட்டிருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை நன்றாக அமைந்துள்ளது. தனுஷ் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த படம் இருக்கும் என நம்பப்படுகிறது. ராஷ்மிகாவுக்கும் முக்கியமான பங்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ட்ரெய்லரில் காட்டப்படும் சுவாரஸ்யமும் வேகமும் படத்திலும் இருந்தால், வெற்றி நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here