தக் லைஃப்’ தொடர்பாக மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக பரவும் செய்தியுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் விளக்கம்!

0

‘தக் லைஃப்’ தொடர்பாக மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக பரவும் செய்தியுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் விளக்கம்!

இயக்குநர் மணிரத்னம் கமல் ஹாசன், சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ரசிகர்கள் பலரும் இந்த படத்தை கடுமையாக விமர்சித்தனர். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் மற்றும் மீம்கள் பரவலாக பகிரப்பட்டன.

இந்நிலையில், “தக் லைஃப் படத்தை பார்த்து ஏமாறிய ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என இயக்குநர் மணிரத்னம் கூறியதாக ஒரு செய்தி இன்று காலை முதல் ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இதை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்த தகவலுக்கு பதிலளித்த மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு, “மணிரத்னம் எந்த ஊடகத்திலும் மன்னிப்புக் கேட்கவில்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதிருப்பதால் அவர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுவது தவறானது” என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here