இணையத்தில் எழுந்த விமர்சனங்களை அடுத்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி’ திரைப்படம், இந்தியாவைத் தவிர மற்ற மொழிகளில் அதே பெயருடன் வெளியிடப்படுகிறது. ஆனால் இந்தியில் மட்டும் ‘மஜதூர்’ என்ற பெயரில் படக்குழு வெளியிடத் திட்டமிட்டது. இந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக உள்ளது எனக் கூறி, பலரும் இணையதளங்களில் விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தி தலைப்பை உடனடியாக மாற்றியுள்ளது. புதிய தலைப்பாக ‘கூலி – தி பவர்ஹவுஸ்’ என்பதைக் கூறியுள்ளது. இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கூலி’ படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதுடன், அதன் பிரமோஷன் பணிகளும் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.