தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததைப் பற்றி இயக்குநர் சேகர் கம்முலா விளக்கம் அளித்துள்ளார்.
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம், இயக்குநர் சேகர் கம்முலாவின் கீழ் உருவாகி, அனைத்து மொழிகளிலும் வெளியானது. இந்த படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு தோன்றவில்லை. இப்படம் ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவானது.
தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்ற கருத்தைச் சொன்ன இயக்குநர் சேகர் கம்முலா, “தமிழில் ‘குபேரா’ ரசிகர்களிடம் பிடிக்குமென நம்பிக்கையுடன் இருந்தேன். இந்த படத்தில் தெலுங்கை விட அதிகமாக தமிழ் கலாசார உணர்வுகள் உள்ளன என நினைத்தேன். அதிலும் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இருந்தாலும், தமிழில் ஏன் இது நல்ல ரீசப்ப்ஷனை பெறவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,” என கூறினார்.
தெலுங்கில் பெற்ற மிகுந்த வரவேற்பினால், ‘குபேரா’ உலகளவில் முதல் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலிக்க முடிந்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் இந்த படம் 2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் தனுஷின் படங்களில் அதிக வசூலடைந்த படமாகும் ‘குபேரா’.