விஷ்ணு மன்சு நடித்த ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்திய அளவில் 2 நாள்களில் வெறும் ரூ.16.35 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடிப்பில் உருவாகியுள்ள புராணதடையிலான ‘கண்ணப்பா’ திரைப்படத்தை, இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், பிரீதி முகுந்தன், மோகன் பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். பான் இந்தியா கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் இந்திய அளவில் வெளியான முதல் நாளில் ரூ.9.35 கோடி வருவாயை ஈட்டிய நிலையில், இரண்டாவது நாளில் ரூ.7 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால், இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.16.35 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. குறிப்பாக, முதல் நாளில் இப்படம் தமிழில் ரூ.15 லட்சம், தெலுங்கில் ரூ.8.25 கோடி, இந்தியில் ரூ.65 லட்சம், மலையாளத்தில் ரூ.20 லட்சம் வசூலித்துள்ளது.
பெரும் நட்சத்திர அணியும், மிகப்பெரிய பட்ஜெட்டும், பிரம்மாண்டமான விளம்பர நடவடிக்கைகளும் இருந்தும், இப்படம் குறைவான வருவாயை ஈட்டியுள்ளமை படக்குழுவை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.