அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைச் சுற்றி புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், யோகி பாபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது அந்த உரிமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முந்தைய படம் ‘விடாமுயற்சி’ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது எதிர்பார்த்த அளவுக்கு பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. இதன் காரணமாகவே, ‘குட் பேட் அக்லி’ திரைப்பட உரிமையை சன் நிறுவனம் வாபஸ் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதென கூறப்படுகிறது. படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒளிபரப்பாகும் என சாத்தியக்கூறுகள் உள்ளன.
மேலும், ‘குட் பேட் அக்லி’ படக்குழு மீண்டும் ஒன்றிணைந்து புதிய திட்டத்தில் பணியாற்றவுள்ளது. இந்த புதிய திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போதைய நிலையில், லொகேஷன் தேர்வு, நடிகர் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை நியமிப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.