தவறை இழைக்கும் எவர் இருந்தாலும் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூரில் இன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் சேவை முகாமில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, வாங்கல் பகுதியில் இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பேசினார். அதைப் பற்றி அவர் கூறியதாவது:
“வாங்கலில் நடந்த ஒரு வருத்தகரமான சம்பவத்தை சிலர் அதனை விடவும் இழிந்த நிலைக்கு இழுத்து, தாழ்ந்த அரசியல் லாபம் தேடி பயன்படுத்தி வருகின்றனர். அந்தச் சம்பவம் தொடர்புடைய நபர் என்னுடன் உள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து, என்னை நேரடியாக தொடர்புடையவராக சித்தரிக்க முயல்கின்றனர். உண்மையில், அந்த நபர் இங்கு வருவதற்கு முன்பு அதிமுகவில் செயலில் இருந்தவர் என்பதும், இந்த சம்பவத்திற்கு நான் எந்த விதமான தொடர்பும் இல்லையென்பதும் பலருக்கும் தெரியும்.”
அதே நேரத்தில், அவர் மேலும் வலியுறுத்தியதாவது:
“தவறுகளைச் செய்பவர்கள் யார் என்கிறதன் அடிப்படையில் அல்லாமல், அவர்கள் செய்த செயல்களின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது எவர் என்றாலும், சட்டம் அனைவருக்கும் சமமே.”
மேலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மணல் தொடர்பாக கூறிய கருத்துகள் குறித்தும் விளக்கமளித்த அவர், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 நிமிடங்களில் மணல் அள்ளலாம் என நான் கூறிய பேச்சு, மக்களின் உள்ளூர் தேவைகள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்திய வகையில்தான். ஆனால், அதைத் திரித்து, ஆற்றில் இருந்து லாரிகளில் மணலைச் சட்டவிரோதமாக அள்ளலாம் என நான் சொன்னது போன்று உருவாக்குகிறார்கள். இது தவறான புரிதலாகும்” எனத் தெரிவித்தார்.