WhatsApp Channel
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் இந்தியா மற்றும் மலேசியா இன்று மோதின.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 23ம் தேதி சீனாவின் ஹாங்சூ நகரில் துவங்குகிறது. ஆனால் தொடக்க விழாவுக்கு முன்பே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் என சில போட்டிகள் தொடங்குகின்றன.
அந்த வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டின் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற மலேசியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Discussion about this post