கரூர் விஜய் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் இறந்தது எப்படி… உச்சகட்ட பரபரப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசல் அசம்பாவதித்திற்கு காரணமாக அமைந்தது. இதில் 10 பெண்கள் உள்பட 29 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரம் ஏராளமானோர் காயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் உள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் தொடங்கி உள்ளார். இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் நடந்தது. நாமக்கல்லில் பெரிய சிக்கல் இல்லாமல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. ஆனால் கரூரில் நிலைமை மோசமானது; மிக பெரிய அளவில் கூட்டம் வந்தது. கூட்ட நெரிசல் ஒரு கட்டத்தில் அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரித்து பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இதில் கட்சித் தொண்டர்கள் மற்றும் குழந்தைகள் மயக்கமடைந்தனர், இதனால் விஜய் தனது உரையை நிறுத்தி அமைதியாக இருக்குமாறு கோரினார். அதே நேரத்தில் பலர் கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அவசரமாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உதவ தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன; மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

கரூர் மருத்துவமனையில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலர் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜய்யை காண காலை முதலே கரூரில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியிருந்தது. மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது; ரசிகர்கள் எப்படியாவது விஜய்யை பார்க்கும் ஆசையில் முண்டியத்தபடியே இருந்தனர். ஒருகட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் நெருக்கியதால் பலரும் மூச்சுத்திணறலில் சிக்கி இறந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் விசாரணைக்கு பிறகே என்ன நடந்தது தெளிவாக தெரியவரும்.

Facebook Comments Box